Home /News /entertainment /

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!

சிவகார்த்திகேயன்  - ஹாரிஸ்

சிவகார்த்திகேயன் - ஹாரிஸ்

தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. அத்துடன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சோனி நிறுவனத்துடன் இணைந்து பல படங்களை தயாரிக்க இருக்கிறது. இதில் முதல் படமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்கள்.

ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்க உள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் கடைசியாக வெளியானது. டான், அயலான் திரைப்படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார். இதில் டான் திரைப்படம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது. அயலான் திரைப்படம் சயின்ஸ் பிக்சன் ஆக தயாராகி வருவதால் அதிக அளவு சிஜி வேலைகள் உள்ளன. அந்த வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. வருட இறுதியில் அயலான் திரைப்படம் திரைக்கு வரலாம்.  இந்தப் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கு ஜாதி ரத்னா திரைப்படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் நடிக்கிறார்.

இதையும் படிங்க.. Bro Daddy review : சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க.. ப்ரோ டாடி விமர்சனம்!

தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. அத்துடன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார் என சில தினங்கள் முன்பு செய்தி வெளியானது. 2018 ல் ராஜ்குமார் பெரியசாமியும் சாய்பல்லவியும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து இப்படி ஒரு செய்தியை வெளியிட்டனர்.

ஆனால் படத்தின் நாயகி இன்னும் முடிவாகவில்லை. அதேநேரம் ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசை அமைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Kamalhaasan, Kollywood, Sivakarthikeyan

அடுத்த செய்தி