ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: ''கலைஞர் கருணாநிதி ஒகே சொன்னார்''.. நினைவுகளை பகிர்ந்த நாசர் - வீடியோ

WATCH: ''கலைஞர் கருணாநிதி ஒகே சொன்னார்''.. நினைவுகளை பகிர்ந்த நாசர் - வீடியோ

 நாசர்

நாசர்

SJ Suryah | எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள வதந்தி தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம்யில் வெளியாகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  வதந்தி படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.அப்பொழுது நடிகர் நாசர், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, லைலா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  நடிகர் நாசர் செய்தியாளர் சந்திப்பின் பொழுது பேசியதாவது 'கலைஞர் கருணாநிதிவுடன் நான் சில படங்களில் பணியாற்றி இருக்கிறேன். எனக்கு அவர் ஒப்புதல் கொடுத்தார் உனக்கு இயற்ற போல வசனங்கள் மாற்றிக்கொள். பொருள் மாறாமல் இருந்தால் சரி என்றார்.ஆனால் இயக்குனர் ஆண்ட்ரூ அப்படி இல்லை அவர் என்ன எழுதி வைத்தாரோ அதையே நான் பேச விரும்பினார் எனவே அவர் வசனங்களை அப்டியே நடித்து கொடுத்தேன். நான் இந்த படத்தில நல்ல நடிச்சிருக்கானா அதற்கு காரணம் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் தான்' என்றார்.

  எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள வதந்தி இணையத் தொடர் உலகின் பல்வேறு மொழிகளில் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது.

  வதந்தி திரைபடத்தில் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, ஸ்ம்ருதி வெங்கட், குமரன் தங்கராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு இளம் பெண்ணின் கொலையை போலீஸ் எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்பது தான் கதை.

  வீடியோவை பார்க்க:

  ' isDesktop="true" id="843357" youtubeid="1fN_vsvIHI0" category="cinema">

  இந்த  தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம்யில் வெளியாகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: SJSurya, Tamil Cinema