ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யா இணையும் 'ஜிகர்தண்டா 2'

ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யா இணையும் 'ஜிகர்தண்டா 2'

ராகவா லாரன்ஸ்-எஸ்.ஜே.சூர்யா

ராகவா லாரன்ஸ்-எஸ்.ஜே.சூர்யா

Jigarthanda 2 | ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் பூஜை மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா லாரன்ஸ் நடிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியிலும் இந்த திரைப்படம் சாதனை படைத்தது.

மதுரையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஜிகர்தண்டா 2 படத்திற்கான கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதற்கு பிறகு முதற்கட்ட பணிகளும் நடைபெற்றது.

தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு பிளாக் மெயில்... பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் உதவியாளர் கைது

கார்ப்பரேட் கைகளில் மக்களை ஒப்படைக்கும் வளர்ச்சி அரசியலை அம்பலப்படுத்தும் 'படவெட்டு'

இந்த நிலையில் ஜிகர்தண்டா 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. குறிப்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரை நகரில் ஜிகர்தண்டா 2 படத்திற்கான பூஜை நடைபெறுகிறது. அந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா மற்றும் மலையாள நடிகை நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

First published:

Tags: Actor Raghava lawrence, SJSurya, Tamil Cinema