• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • SJ Surya: க்ரைம் வெப் சீரிஸில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா!

SJ Surya: க்ரைம் வெப் சீரிஸில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா!

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கென எடுக்கப்படும் ஆந்தாலஜியில் சூர்யா, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

  • Share this:
    ஓடிடி தளங்கள் பெருகிய பிறகு வெப் சீரிஸுக்கு தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. முத்தழகாக தேசிய விருது வென்ற போது கிடைக்காத ரசிகர்கள், ப்ரியாமணிக்கு தி பேமிலி மேன் வெப் தொடர் மூலம் கிடைத்திருக்கிறார்கள். அதுபோல்தான் சமந்தாவுக்கும். சினிமாவில் அவர் செய்திராத கதாபாத்திரம் தி பேமிலி மேன் 2 தொடரில் கிடைத்தது.

    இந்தியில் அஜய் தேவ்கானே வெப் தொடர் பக்கம் வந்துவிட்டார். இங்கேயும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கென எடுக்கப்படும் ஆந்தாலஜியில் சூர்யா, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். தமன்னா, தாப்ஸி, அமலா பால், காஜல் அகர்வால் என நடிகைகள் ஏற்கனவே வெப் தொடர் பக்கம் ஒதுங்கிவிட்டனர். நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    க்ரைம் த்ரில்லராக தயாராகும் இந்த வெப்தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் திரைப்படத்தை இயக்கியவர். பிரபல ஓடிடி தளத்துக்காக இந்த வெப் தொடர் தயாராகிறது. ஆகஸ்டில் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டமிட்டுள்ளனர்.

    இந்த வருடம் மணிரத்னம் தயாரித்திருக்கும் நவரசா ஆந்தாலஜி போலவே, தியாகராஜன் குமாரராஜா தயாரிப்பிலும் ஒரு ஆந்தாலஜி தொடர் ஓடிடியில் வெளியாவிருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: