Home /News /entertainment /

காஸ்ட்லி வில்லனாக மாறிய எஸ்.ஜே.சூர்யா...!

காஸ்ட்லி வில்லனாக மாறிய எஸ்.ஜே.சூர்யா...!

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

மாநாடு படத்துக்கு முன்பு 2019 இல் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதற்கு இரண்டு கோடியும், ஹீரோவாக நடிப்பதற்கு ஒரு கோடியும் கேட்டு வந்தார். மாநாடு படத்துக்குப் பிறகு அவரது சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
இன்றைய தேதியில் தமிழின் மோஸ்ட் வான்டட் வில்லன் யார் என்று கேட்டால் எஸ்.ஜே.சூர்யாதான். மாஸ்டர், விக்ரம் படங்களில் வில்லனாக நடித்தாலும் விஜய் சேதுபதியை இதில் சேர்க்க முடியாது. அவர் பார்ட் டைம் வில்லன்.

மாநாடு படத்துக்கு முன்பு 2019 இல் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதற்கு இரண்டு கோடியும், ஹீரோவாக நடிப்பதற்கு ஒரு கோடியும் கேட்டு வந்தார். மாநாடு படத்துக்குப் பிறகு அவரது சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளது. விஷாலின் 33-வது படமான மார்க் ஆண்டனியில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா கேட்டது ஆறு கோடிகள். அதுவே ஹீரோ என்றால் நான்கு கோடிகள்.

மார்க் ஆண்டனி படத்தை மினி ஸ்டுடியோஸ் வினோத் தயாரிக்கிறார். இவரது கடைசிப் படம் எனிமி. விஷால் நடித்தது. படத்தை ஓடிடியில் வெளியிட்டிருந்தால் லாபம் கிடைத்திருக்கும். வீம்பாக திரையரங்கில் வெளியிட்டதில் பல கோடிகள் நஷ்டம். இதனால், மார்க் ஆண்டனி படத்தில் விஷாலிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ள கேட்டுள்ளார் வினோத்.

இந்தப் பிரச்சனையால் பட அறிவிப்பு தள்ளிப்போய், ஒருவழியாக சமரசமாகி படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். விஷால் தனது சம்பளத்தில் ஒரு கோடி குறைத்துக் கொண்டதாக கேள்வி. இரண்டு கோடியாகவும் இருக்கலாம்.

Also read... தமிழ் சினிமாவில் கருத்தியல், வணிகம் இரண்டிலும் வென்ற ஒரே படம் 'ஜெய் பீம்' - கே.பாலகிருஷ்ணன்!

எஸ்.ஜே.சூர்யா ஆறு கோடிகள் கேட்டது தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி. ஆறு கோடி மதிப்புள்ள காஸ்ட்லி வில்லன் வேண்டாம் என்று அவரை நிராகரித்திருக்கிறார்கள். ஆனால், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு எஸ்.ஜே.சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணம். இறுதியில் படத்தின் கதையும், தனது கதாபாத்திரமும் நன்றாக இருக்கவே ஒரு கோடி குறைத்து ஐந்து கோடிகளுக்கு நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்புக் கொண்டுள்ளார். ஹீரோ எஸ்.ஜே.சூர்யாவைவிட வில்லன் எஸ்.ஜே.சூர்யாதான் ரொம்பவும் காஸ்ட்லி.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: SJSurya

அடுத்த செய்தி