• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'ஜெய்பீமை' பாராட்டாவிட்டால் நான் சினிமாவில் இருக்கவே தகுதியற்றவன்' - எஸ்.ஜே. சூர்யா எமோஷ்னல்

'ஜெய்பீமை' பாராட்டாவிட்டால் நான் சினிமாவில் இருக்கவே தகுதியற்றவன்' - எஸ்.ஜே. சூர்யா எமோஷ்னல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் 4-ம்தேதி தியேட்டர்களில் வெளியாகி ஓடிக் கொண்டிருந்தாலும், அதற்கு முன்பே ஓடிடியில் வெளியான ஜெய் பீம் ஏற்படுத்தும் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை.

  • Share this:
    ஜெய்பீம் படத்தை பாராட்டி ட்வீட் போடாவிட்டால் நான் சினிமாவில் இருக்கவே தகுதியற்றவன் என்று நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளார்.

    விஜய்யின் குஷி, அஜித்தின் வாலி உள்ளிட்ட மெகாஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இயக்குனராக இருந்ததை விட பெயரும் புகழும் நடிகராக இருக்கும்போது கிடைத்திருக்கிறது. மெர்சல், ஸ்பைடர், இறைவி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

    எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் சிம்பு ஹீரோவாக நடித்திருக்கும் மாநாடு திரைப்படம் இம்மாதம் 25-ம்தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரில் எஸ்.ஜே. சூர்யா பேசும் வசனம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்நிலையில், மெகாஹிட் படமான சூர்யாவின் ஜெய்பீமை பார்த்துவிட்டு எஸ்.ஜே. சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,

    'ஜெய்பீம் படத்தை பார்த்து விட்டேன். உண்மையான கதாநாயகன் முன்னாள் நீதிபதி சந்துருவை நடிகர் சூர்யாவும், இயக்குனர் ஞானவேல் சாரும் கவுரவப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தை பார்க்காமல் யாரும் இருந்தால் தயவு செய்து பாருங்கள். ஜெய்பீமை பார்த்து விட்டு அதைப் பாராட்டி ட்வீட் செய்யாமல் இருந்தால் நான் சினிமாவில் இருக்கவே தகுதியற்றவனாக ஃபீல் பண்ணுகிறேன்' என்று கூறியுள்ளார்.



    ஜோதிகா மற்றும் சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள ஜெய்பீம், கடந்த 2-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் 4-ம்தேதி தியேட்டர்களில் வெளியாகி ஓடிக் கொண்டிருந்தாலும், அதற்கு முன்பே ஓடிடியில் வெளியான ஜெய் பீம் ஏற்படுத்தும் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: