Home /News /entertainment /

ஒவ்வொரு நாளும் என்ஜாய் செய்தேன் - டான் குறித்து எஸ்.ஜே.சூர்யா

ஒவ்வொரு நாளும் என்ஜாய் செய்தேன் - டான் குறித்து எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

Sivakarthikeyan Don Movie : டான் படத்தை சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும், லைகாவும் இணைந்து தயாரித்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
இயக்குனராக அடைந்த புகழைவிட நடிகராக எஸ்.ஜே.சூர்யா அறுவடை செய்யும் புகழும், ரசிகர்கள் பாராட்டும் அதிகம். இறைவி படத்தில் அவரது நடிப்புத் திறமை வெளிப்பட்டாலும் மாநாடு படம் தான் அதனை உச்சியில் உட்கார வைத்தது.

மாநாடு படத்தில் சிம்பு திரையில் தோன்றும் போது எழும் கரவொலிகளுக்கு இணையாக எஸ்.ஜே.சூர்யாவுக்கும் கரவொலி கிடைத்தது. படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் மனதில் அவர்தான் நிறைந்து நின்றார். அடுத்து அவரது நடிப்பில் வெளிவரும் பெரிய படம் டான். சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. எஸ்.ஜே.சூர்யா தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா சார் உங்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சிக்குரியது என குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, டான் படத்தின் படப்பிடிப்பு, டப்பிங்கில் ஒவ்வொரு நாளும் என்ஜாய் செய்தேன் என தெரிவித்துள்ளார்.

also read : தன்னைவிட 8 வயது இளைய நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அனுஷ்கா?

டான் படத்தை சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும், லைகாவும் இணைந்து தயாரித்துள்ளன. அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  2022 பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ரொமான்டிக் காமெடியாக படம் தயாராகியுள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: S.J.Surya, Sivakarthikeyan

அடுத்த செய்தி