Home /News /entertainment /

விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா... மாநாடு வெற்றியால் மார்க்கெட் உயர்ந்தது

விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா... மாநாடு வெற்றியால் மார்க்கெட் உயர்ந்தது

திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக், அடுத்த படமான அன்பானவன், அசராதவன் அடங்காதவன் படத்தை சிம்புவை வைத்து இயக்கினார். இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.

    மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா மீதான டிமாண்ட் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அந்த படத்தில் தனுஷ்கோடி என்ற கேரக்டரில், எஸ்.ஜே.சூர்யாவை தவிர்த்து வேறு யாரையும் ரசிகர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, அவரது நடிப்பு இருந்தது.

    சிம்புவுக்கு இணையாக அவரது ரசிகர்களும் எஸ்.ஜே.சூர்யாவை கொண்டாடினார்கள் என்பதுதான் அவருக்கு கிடைத்த வெற்றி. இந்த நிலையில், அவரை தங்களது படத்தில் புக் செய்வதற்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க : அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... சிங்கிளாக வந்து மிரட்டப் போகும் வலிமை

    இதையும் படிங்க : கே.ஜி.எஃப். 2 உடன் மோதுமா விஜய்யின் பீஸ்ட்? - இரு படங்களும் ஏப்ரலில் ரிலீஸ்

    இதையும் படிங்க : சிலம்பரசனுக்கு கதை சொன்ன சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா

     எனிமி படத்தை தயாரித்த வினோத் குமார்தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார். விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. அதன்பின்னர் அவர் துப்பறிவாளன் 2 படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்குவார் என்று சமீபத்தில் தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் விஷால் கமிட் ஆகியுள்ளார்.

    இதையும் படிங்க : YearEnder2021: 2021-ல் கவனம் ஈர்த்த டாப் 5 அறிமுக நடிகைகள்!

    திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக், அடுத்த படமான அன்பானவன், அசராதவன் அடங்காதவன் படத்தை சிம்புவை வைத்து இயக்கினார். இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஆதிக் சினிமாவில் ஹிட் கொடுக்கவில்லை. இதுதான், விஷால் ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன் மீதான விமர்சனங்களை முறியடித்து இந்த படத்தை வெற்றிப்படமாக ஆதிக் மாற்றுவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

    இதையும் படிங்க : ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்!
    Published by:Musthak
    First published:

    Tags: Actor vishal, SJSurya

    அடுத்த செய்தி