ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"சர்வதேச அளவில் எல்லைகளைக் உடைத்து சாதிக்க வேண்டுமென்ற ஆசை"- எஸ்.ஜே.சூர்யா

"சர்வதேச அளவில் எல்லைகளைக் உடைத்து சாதிக்க வேண்டுமென்ற ஆசை"- எஸ்.ஜே.சூர்யா

நடிகர் எஸ்.ஜே.சூர்யா

நடிகர் எஸ்.ஜே.சூர்யா

நடிக்க வந்த தனக்கு என்னடா இப்படி நடக்கிறது என்று நினைத்திருக்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா பேச்சு 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்வதேச அளவில் எல்லைகளைக் உடைத்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை தன்னுடைய உதவியாளர் மூலம் நிறைவேறி இருப்பதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.

விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஆகியோர் இணைந்து வதந்தி என்ற இணையத் தொடரை தயாரித்துள்ளனர். அதில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா உள்ளிட்ட நடித்துள்ளனர். கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இந்த இணைய தொடரை இயக்கியுள்ளார். இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் எஸ்.ஜே சூர்யா, இயக்குனராக இருந்த சமயத்தில் நடிக்க வந்த நமக்கு என்னடா இப்படி இருக்கிறதே என்ற ஆதங்கம் இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் சர்வதேச அளவில் எல்லைகளை உடைத்து சாதிக்க வேண்டுமென்ற ஆசை இருந்ததாகவும்,  அது தற்போது வதந்தி மூலமாக நிறைவேறி இருப்பதாகவும் கூறினார். வதந்தி இணையத் தொடரை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ், தன்னுடன் வாலி திரைப்படத்திலிருந்து நியூ திரைப்படம் வரை உதவி இயக்குனராக பணியாற்றினார்.

Mahima Nambiar : நடிகை மஹிமா நம்பியார் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

தன்னுடைய ஆசை அவர் மூலம் நிறைவேறி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார். அத்துடன் நடுக்கடலின் அமைதியையும் ஆழத்தையும் கொண்ட நடிப்பை தன்னிடம் இருந்து அவர் வாங்கியுள்ளார் எனவும் பெருமிதம் கொண்டார்.

தெலுங்கில் 'வாரிசு' பட சிக்கல்.. நாளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்!

வதந்தி இணையத் தொடர் உலகின் பல்வேறு மொழிகளில் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் வதந்தி இணைய தொடரின் ட்ரெய்லரை வெளியிட்டனர்.

Published by:Srilekha A
First published:

Tags: Tamil Cinema