ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான 'கடமையை செய்' ட்ரெய்லர் ரிலீஸ்... சிம்பு வெளியிட்டார்...

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான 'கடமையை செய்' ட்ரெய்லர் ரிலீஸ்... சிம்பு வெளியிட்டார்...

கடமையை செய் படத்தில் எஸ்.ஜே. சூர்யா - யாஷிகா ஆனந்த்

கடமையை செய் படத்தில் எஸ்.ஜே. சூர்யா - யாஷிகா ஆனந்த்

வினோத் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

எஸ்.ஜே. சூர்யா, யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள கடமையை செய் படத்தின் ட்ரெய்லரை சிம்பு வெளியிட்டுள்ளார்.

மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் கடமையை செய் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை சுந்தர் சி நடிப்பில் வெளிவந்த முத்தின கத்தரிக்காய் படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க - 'விக்ரம்' இந்தி பட புரொமோஷனுக்காக பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்கும் கமல்...

எஸ்.ஜே. சூர்யா, யாஷிகா ஆனந்துடன் மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், மோகன் வைத்யா, டிஎஸ்ஆர் ராம்ஜி, ராஜ சிம்மன் உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

வினோத் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

ட்ரெய்லரை பார்க்க

' isDesktop="true" id="741874" youtubeid="EZEJR__aPp0" category="cinema">

படத்தை டி.ஆர். ரமேஷ், எஸ். ஜாகிர் உசேன் தயாரித்துள்ள நிலையில், சிம்புவின் சிம்பு சினி ஆர்ட்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

First published:

Tags: Simbhu, SJSurya