Home /News /entertainment /

SJ Surya: ஷங்கர்-ராம் சரண் படத்திற்கு பல கோடி சம்பளம் பெற்ற எஸ்.ஜே.சூர்யா?

SJ Surya: ஷங்கர்-ராம் சரண் படத்திற்கு பல கோடி சம்பளம் பெற்ற எஸ்.ஜே.சூர்யா?

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

படத்தை தமிழில் வெளியிடும்போது இயக்குனர் ஷங்கர் என்ற பெயருடன் எஸ்.ஜே.சூர்யா பெயரும் வியபாரத்திற்கு உதவும் என தயாரிப்பாளர் தில் ராஜு கணக்கிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ராம் சரண் படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் 15-வது படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. அதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இன்று இணைந்துள்ளார். இதற்கான தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று முதல் அவருக்கான காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்காக எஸ்.ஜே.சூர்யாவிற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என சினிமா துறையில் கூறுகின்றனர். அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகின்றன. அத்துடன் தமிழகத்தில் அவருக்கு என ஒரு மார்கெட் உள்ளது. அந்தப் படத்தை தமிழில் வெளியிடும்போது இயக்குனர் ஷங்கர் என்ற பெயருடன் எஸ்.ஜே.சூர்யா பெயரும் வியபாரத்திற்கு உதவும் என தயாரிப்பாளர் தில் ராஜு கணக்கிட்டுள்ளார். அதன் காரணமாக பெரும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

இனி எனக்கும் என் வளர்ப்பு மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - முற்றுப்புள்ளி வைத்த ராஜ்கிரண்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தவிர விஜய் நடிக்கும் வாரிசு படத்திலும் அவர் ஒரு கதபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கும் நல்ல சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
Published by:Shalini C
First published:

Tags: SJSurya

அடுத்த செய்தி