சிவகுமாரின் சபதம் - அடுத்த டி.ஆராக மாறிய ஹிப் ஹாப் ஆதி!

ஹிப் ஹாப் ஆதி

சிவகுமாரின் சபதம் என்றிருப்பதால் நடிகர் சிவகுமாரின் சுயசரிதையா என்று அச்சப்பட வேண்டியதில்லை.

 • Share this:
  டி.ராஜேந்தரை தசாவதானி என்பார்கள். ஒரு படத்தின் பத்து வேலைகளை அவரே செய்வார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், எடிட்டிங், தயாரிப்பு என அவரது பணி நீளும். போஸ்டர்கூட அவரேதான் ஒட்டுவார் என்று கிண்டலாக பேசியவர்கள் இருக்கிறார்கள். முக்கியமான விஷயம். அவர் தசாவதானியாக எடுத்தப் படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள்.

  நம் விஷயத்துக்கு வருவோம். மருத்துவத்தில் எப்படி ஒவ்வொரு மனித உறுப்புக்கும் தனித்தனி நிபுணர்கள் வந்துவிட்டார்களோ, அப்படி சினிமாவிலும் மாற்றம் வந்தாயிற்று. இரண்டுக்கு மேல் வேலைகளை யாரும் இழுத்துப் போட்டுக் கொள்வதில்லை. விதிவிலக்கு ஹிப் ஹாப் தமிழா. இசையமைப்பாளராக உள்ளே வந்து நடிப்பு, பாடல்கள், இயக்கம் என்று சிலம்பம் சுற்றுகிறார். இவரை வைத்து பாரம்பரியமிக்க சத்யஜோதி பிலிம்ஸ் ஒரு படம் தயாரிக்கிறது. பெயர், சிவகுமாரின் சபதம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என முக்கியமான வேலைகள் அனைத்தையும் அவரே கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். சிவகுமாரின் சபதம் என்றிருப்பதால் நடிகர் சிவகுமாரின் சுயசரிதையா என்று அச்சப்பட வேண்டியதில்லை. நாயகனின் பெயர் சிவகுமார். இதைத்தவிர இந்த கதைக்கும் நடிகர் சிவகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. படத்தைப் பார்க்கிற வேலையாவது மற்றவர்களுக்கு தரும்விதத்தில் படம் இருந்தால் சிறப்பு.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: