சிக்சர் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வீடியோ வெளியீடு!

முழுக்க காமெடியை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் வைபவ் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார்.

சிக்சர் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வீடியோ வெளியீடு!
சிவகார்த்திகேயன்
  • News18
  • Last Updated: August 30, 2019, 11:21 AM IST
  • Share this:
சிக்சர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் பாடியுள்ள பாடல் வீடியோவை படக்குழு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

வால்மேட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் சிக்ஸர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சாக்‌ஷி இயக்கியுள்ளார். வைபவ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

முழுக்க காமெடியை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் வைபவ் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். ராதாரவி, இளவரசு, சதீஷ், ராமர் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள சிக்சர் திரைப்படத்திலிருந்து சிவகார்த்திகேயன் பாடியுள்ள பாடலை படக்குழு வீடியோவாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Also see...

Loading...

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...