சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ

news18
Updated: May 26, 2019, 5:55 PM IST
சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ
சிவகார்த்திகேயன்
news18
Updated: May 26, 2019, 5:55 PM IST
சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்கும் இரண்டு ஹீரோயின்கள் படப்பிடிப்பு தளத்தில் ரகளை செய்துள்ளனர். அதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிஸ்டர்.லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியடையவில்லை.

இந்தப் படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, சூரி, நடராஜன், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் இருவரும் வீடியோ ஒன்றை எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இருவரின் குறும்பும் ரகளையும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வீடியோ பார்க்க: கவுண்டமணி வாழ்க்கைக் கதை!

First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...