Home /News /entertainment /

பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம்

பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம்

பிரின்ஸ்

பிரின்ஸ்

விருமன் படத்துடன் மோதுவதை தவிர்த்து சர்தாருடன் மோதும் பிரின்ஸ். சிவகார்த்திகேயன் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 

  • News18
  • Last Updated :
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் பிரின்ஸ். Rom-Com வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகவிருக்கும் பிரன்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர்.  அதிலும் தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது.

இதற்காக சிவகார்த்திகேயன், சத்யராஜ், நடிகை மரியா மற்றும் இயக்குனர் ஆகியோர் கலந்துரையாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோ  ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.



விநாயகர் சதுர்த்திக்கு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தது. இந்த நிலையில் பிரண்ட்ஸ் திரைப்படம் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்த்தியின் மற்றொரு படமான சர்தார் தீபாவளிக்கு வெளியாகிறது. அந்தப் படத்துடன் சிவகார்த்திகேயன் படம் தற்போது மோதுகிறது.

Also read... இன்று வெளியாகிறது விஜய் 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

அதே நாளில் அஜித்தின் 61-வது படம் வெளியாகும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால் இந்தப் படங்கள் தீபாவளிக்கு வருவதால், அஜித் படம் தள்ளிச் செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Sivakarthikeyan

அடுத்த செய்தி