சிவகார்த்திகேயன் குரலில் ‘கலக்கு மிஸ்டர் லோக்கலு’ - மிரட்டலான அப்டேட்!

news18
Updated: April 16, 2019, 6:34 PM IST
சிவகார்த்திகேயன் குரலில் ‘கலக்கு மிஸ்டர் லோக்கலு’ - மிரட்டலான அப்டேட்!
மிஸ்டர் லோக்கல் பட போஸ்டர்
news18
Updated: April 16, 2019, 6:34 PM IST
மிஸ்டர் லோக்கல் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்ததைத் தொடர்ந்து படம் மே 1-ம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6-ம் தேதி படத்தின் முதல் பாடலான ‘டக்குனு டக்குனு பார்க்காத’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தப் பாடலை ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் அனிருத் பாடியிருந்தார்.இந்தப் பாடலைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு மிரட்டலான அப்டேட்டை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி ‘கலக்கு மிஸ்டர் லோக்கலு’ என்ற படத்தின் இரண்டாம் பாடல் நாளை வெளியாகிறது. இந்தப் பாடலை சிவகார்த்திகேயனே பாடியுள்ளார்.இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் தயாரிக்கும் முதல் படம்... ஹீரோயினாகும் வாணி போஜன்...!வீடியோ பார்க்க: காப்பான், என்.ஜி.கே அதிரடியாக அரசியல் பேசும் சூர்யா!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...