• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தெலுங்கில் வருண் டாக்டராக கலக்கப் போகும் சிவகார்த்திகேயன்...!

தெலுங்கில் வருண் டாக்டராக கலக்கப் போகும் சிவகார்த்திகேயன்...!

சிவகார்த்திகேயன் டாக்டர்

சிவகார்த்திகேயன் டாக்டர்

ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் திரையரங்கில் வெளியாவதால் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் தவிர தெலுங்கிலும் சின்ன அளவில் மார்க்கெட் உள்ளது. அதனால், டாக்டர் படத்தை தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். 

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் தனது இரண்டாவது படமாக டாக்டரை இயக்கினார். கொரோனா இரண்டாம் அலை மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்த வருடம் ஏப்ரல் மாதமே படம் வெளியாகியிருக்கும். ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் டாக்டரை ஓடிடியில் வெளியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவகார்த்திகேயன் படங்களுக்கு தமிழகத்தில் 40 கோடி அளவுக்கு வியாபாரம் உள்ளதால் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் டாக்டரை ஓடிடியில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனா வேகமாக கட்டுக்குள் வந்து திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டன. டாக்டரையும் திரையரங்கில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர்

டாக்டரை கேஜேஆர் ஸ்டுடியோஸும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. ப்ரியங்கா அருள் மோகன் நாயகி. வினித், மிலிந்த் சோமன் இருவரும் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ளார்.

Also read... அண்ணாத்தயுடன் மோதும் மகான்...? - புகைப்படங்கள்!

டாக்டரை தமிழில் வெளியாகும் அதேநாள் வருண் டாக்டர் என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடுகின்றனர். தெலுங்கில் சிவகார்த்திகேயனுக்கு சின்ன அளவில் மார்க்கெட் உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்

ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் திரையரங்கில் வெளியாவதால் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: