• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தடைகளைத் தாண்டி வெளியானது டாக்டர் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

தடைகளைத் தாண்டி வெளியானது டாக்டர் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

சிவகார்த்திகேயன் டாக்டர்

சிவகார்த்திகேயன் டாக்டர்

ரிலீஸுக்கு முந்தைய நாள் - நேற்று - தயாரிப்பாளர் செட்டில் செய்ய வேண்டிய பழைய கடன்களின் கணக்கைச் சொல்லி படத்தை முடக்குதற்கான சம்பவங்கள் நடந்தன. இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் அறிவித்தபடி இன்று வெளியாகுமா என்ற சிக்கல் எழுந்த நிலையில், பிரச்சனைகள் அனைத்தையும் கடந்து படம் இன்று காலை வெளியாகி உள்ளது. ரசிகர்கள் இதனால் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், யோகி பாபு, வினய், இளவரசு உள்பட பலர் நடித்துள்ள படம் டாக்டர். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், கேஜே ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து படத்தை தயாரித்திருந்தன. கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன

ரசிகர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஓடிடியில் படத்தை வெளியிட அதிருப்தி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து படத்தை திரையரங்கில் வெளியிடுவது என முடிவை மாற்றி, அக்டோபர் 9 படம் வெளியாகும் என அறிவித்தனர். அதே நாளில் தெலுங்கிலும் படம் வெளியாகும் என்றனர். தெலுங்குப் பதிப்புக்கு வருண் டாக்டர் என பெயர் வைத்திருந்தனர்

ரிலீஸுக்கு முந்தைய நாள் - நேற்று - தயாரிப்பாளர் செட்டில் செய்ய வேண்டிய பழைய கடன்களின் கணக்கைச் சொல்லி படத்தை முடக்குதற்கான சம்பவங்கள் நடந்தன. இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடத்தப்படுவது சநதேகம் என்றனர் திரையுலகினர்

Also read... ஜீவா, மிர்ச்சி சிவா ஜோடியாக நடிக்கும் பாயல் ராஜ்புத், தான்யா ஹோப்!

ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக பிரச்சனை நேற்றிரவே முடித்து வைக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தில் கணிசமான தொகையை விட்டுத் தந்தார் என்றும், அடுத்தப் படத்தில் ஈடு செய்வதாக வாக்களித்துள்ளார் என்றும் இருவேறு தகவல்கள் உலவுகின்றன.



இந்நிலையில், இன்று அதிகாலை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். "நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே. எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி" என அதில் குறிப்பிட்டு, "இன்று முதல் டாக்டர்... பாருங்கள்... நண்பர்கள், குடும்பத்துடன் கொண்டாடுங்கள்..." என குறிப்பிட்டுள்ளார்.  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: