• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்த வருடத்தின் மூன்றாவது அதிகபட்ச ஓபனிங்கை பெற்ற டாக்டர்...!

இந்த வருடத்தின் மூன்றாவது அதிகபட்ச ஓபனிங்கை பெற்ற டாக்டர்...!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

டாக்டரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சியும், ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்டும் வாங்கியுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இந்த வருட தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் மூன்றாவது அதிகபட்ச ஓபனிங்கை பெற்றுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாரின் இரண்டாவது படம் டாக்டர். சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், யோகி பாபு உள்பட பலர் நடித்திருந்தனர். அக்டோபர் 9 சனிக்கிழமை படம் வெளியானது. கொரோனா முதல் அலைக்குப் பின் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்த படம் விஜய்யின் மாஸ்டர் என்றால், இரண்டாம் அலைக்குப் பின் ரசிகர்களை குடும்பமாக திரையரங்குகளுக்கு கொண்டு வந்த பெருமை டாக்டரை சாரும். இந்த பிளாக் க்யூமர் திரைப்படம் இந்த வருடம் வெளியான படங்களில் மூன்றாவது அதிகபட்ச ஓபனிங்கை பெற்றுள்ளது

இந்தப் பட்டியலில் விஜய்யின் மாஸ்டர் முதலிடத்திலும், தனுஷின் கர்ணன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. டாக்டர் சனிக்கிழமை முதல்நாள் தமிழக அளவில் சுமார் 7.36 கோடிகளை வசூலித்துள்ளது. இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை 8.05 கோடிகளை வசப்படுத்தியுள்ளது. கொரோனா அச்சம் இன்னும் மாறாத நிலையில், 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வசூலை பெற்றிருப்பது சாதனை என்றே சொல்ல வேண்டும்.

Also read... என் மாமியாரை முன் மாதிரியாகக் கொண்டு நடித்தேன் - ஜோதிகா!

நேற்று, வார நாளான திங்கள்கிழமையும் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக டாக்டர் ஓடியதை பதிவு செய்துள்ளனர். இன்றும் ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படையெடுப்பதை காண முடிகிறது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் தமிழின் முதல் பிளாக் பஸ்டர் என்ற பெருமையை  டாக்டர் பெற்றுள்ளது.

டாக்டரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சியும், ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்டும் வாங்கியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: