• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கேரளாவில் சிவகார்த்திகேயனின் டாக்டர் வெளியீட்டு தேதியில் மாற்றம்!

கேரளாவில் சிவகார்த்திகேயனின் டாக்டர் வெளியீட்டு தேதியில் மாற்றம்!

டாக்டர் படம்

டாக்டர் படம்

கேரளாவில் அக்டோபர் 21 ஆம் தேதி படம் வெளியாகும் என்று முதலில் அறிவித்திருந்தனர். கேரளா முழுக்க கடும் மழை பெய்து பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கியிருக்கும் டாக்டர் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல வரவேற்புடன் ஓடுகிறது. 

படத்தின் பிளாக் க்யூமர் ஏரியாக்கள் வொர்க் அவுட்டானதால் படத்தை பலமுறை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனா பெருந்தொற்றால் வருடக்கணக்கில் வீட்டில் முடங்கிப் போனவர்கள் குடும்பமாக டாக்டருக்கு செல்கிறார்கள். இதனால் 9 தினங்களில் தமிழகத்தில் டாக்டர் 51 கோடிகளை வசூலித்ததாக கூறுகின்றனர். யுஎஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படம் வசூலை குவிக்கிறது.

டாக்டர் தமிழில் வெளியான அதேநாள் தெலுங்கு மாநிலங்களில் வருண் டாக்டர் என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. வாங்கியவர்கள், திரையிட்டவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் படம் லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது. கேரளாவில் திரையரங்குகள் திறக்கப்படுவதால் அங்கும் படத்தை வெளியிடுகின்றனர்.

Also read... அண்ணாத்த படத்தின் கேரள திரையரங்கு உரிமை விற்று தீர்ந்தன!

கேரளாவில் அக்டோபர் 21 ஆம் தேதி படம் வெளியாகும் என்று முதலில் அறிவித்திருந்தனர். கேரளா முழுக்க கடும் மழை பெய்து பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்துள்ளனர். அக்டோபர் 21 க்குப் பதில் ஒருவாரம் தள்ளி அக்டோபர் 28 படம் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.

கேரளாவில் திரையரங்குகள் திறந்தபின் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் படம் டாக்டர். அதனால், படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் டாக்டரை அக்டோபர் 21 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: