Home /News /entertainment /

சிவகார்த்திகேயனின் அயலான் எப்படியிருக்கும்? - எடிட்டர் வெளியிட்ட தகவல்

சிவகார்த்திகேயனின் அயலான் எப்படியிருக்கும்? - எடிட்டர் வெளியிட்ட தகவல்

அயலான்

அயலான்

Ayalaan: சிவகார்த்திகேயனின் மார்க்கெட் பெட்ரோல் விலைபோல ஏறிக் கொண்டிருந்த நேரம், அயலான் படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் டி.ராஜா தனது 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆரம்பித்தார்.

  • News18
  • Last Updated :
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் குறித்து நேர்மறையான கருத்தை முன்வைத்துள்ளார் எடிட்டர் ரூபன்.

சிவகார்த்திகேயனின் மார்க்கெட் பெட்ரோல் விலைபோல ஏறிக் கொண்டிருந்த நேரம், அயலான் படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் டி.ராஜா தனது 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆரம்பித்தார். இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கம், ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங் என அனைவருமே முன்னணி கலைஞர்கள்.

இந்த நேரத்தில் டி.ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் பல கோடிகள் நஷ்டத்தை தர, அயலான் படவேலைகள் தடைபட்டன. சிவகார்த்திகேயன் டி.ராஜாவின் தயாரிப்பிலிருந்து விலகி வெளி தயாரிப்பு நிறுவனங்கள் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இறுதியில் சென்ற வருட ஆரம்பத்தில் அயலானின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக அறிவித்தனர். தற்போது சிஜி பணிகள் நடந்து வருகின்றன.

அயலான் தொடங்கிய பின் ஆரம்பிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் படங்கள் வாpசையாக வெளியாகி வருகின்றன. அயலான் மட்டும் விண்வெளியில் எறிந்த கல் மாதிரி எந்த தகவலும் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில், படத்தின் எடிட்டர் ரூபன் படம் குறித்து நேர்மறை கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

Also read... மியூஸிக் வீடியோ வேலைகளை தொடங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...!

அயலான் குறித்து பேசியிருக்கும் அவர், ஹாலிவுட் தரத்துக்கு இணையாக அயலான் காட்சிகள் இருப்பதாகவும், சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்வில் அயலான் ஒரு மைல்கல்லாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் அயலான் எடிட்டரின் டேபிளை எட்டியிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. அயலான் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகியுள்ளது. ஏலியன் ஒன்று பூமிக்கு வருவதுதான் கதை.

அயலானில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் இஷா கோபிகர் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கருணாகரன் போன்ற நகைச்சுவை நடிகர்களும் இருக்கிறார்கள். இந்த வருட தீபாவளிக்கு அயலான் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Sivakarthikeyan

அடுத்த செய்தி