ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கவுண்டமணி படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

கவுண்டமணி படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

கவுண்டமணி - சிவ கார்த்திகேயன்

கவுண்டமணி - சிவ கார்த்திகேயன்

கவுண்டமணி நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பாரா சிவகார்த்திகேயன்?

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கவுண்டமணி நடிக்க உள்ள பழனிசாமி வாத்தியார் என்ற திரைப்படத்தில் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 'பழனிசாமி வாத்தியார்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். அதில் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியராக நடிக்கிறார் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். அந்த திரைப்படத்தை பேயை காணோம் படத்தின் இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்க உள்ளார். இதற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஜனவரி மாதத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.

கவுண்டமணியிடம் மேலாளராக இருந்த மதுரை செல்வம் என்பவர் அந்த படத்தை தயாரிக்க உள்ளார்.  அத்துடன் பழனிசாமி வாத்தியார் படத்தில் கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன் அல்லது தனுசை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

WATCH – 2022 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட 5 பாடல்கள்…

முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி… பிரமாண்ட ஓபனிங்கை நோக்கி அஜித்தின் துணிவு…

குறிப்பாக அவர்களில் ஒருவரை கவுண்டமணியின் மாணவனாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கின்றனர். கவுண்டமணி நடிப்பில் இறுதியாக எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. 

First published:

Tags: Sivakarthikeyan, Tamil Cinema, Tamil News