ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan: ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சிவகார்த்திகேயன் விரைவில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.

குறுகிய காலத்தில் முன்னணி நடிகரானவர் சிவகார்த்திகேயன். இவரது படங்களுக்கு தமிழகத்துக்கு வெளியேயும் வரவேற்பு உள்ளது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் உலக அளவில் 100 கோடியை கடந்து வசூல் செய்தது. அவர் நடித்துள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அயலான் திரைப்படம் post-production நிலையில் இருக்கிறது. தற்போது அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இதையடுத்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்நிலையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also read... அஜித் படத்தால் தள்ளிப்போகும் தனுஷின் மாறன்...?

இவர்கள் இருவருக்கும் முன்பணம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநாடு வெற்றிப் படத்தை தொடர்ந்து மன்மதலீலை படத்தை இயக்கியிருக்கும் வெங்கட்பிரபு அடுத்து தெலுங்கு திரைப்படத்தை இயக்கப்போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தை இயக்கிய பிறகு அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கலாம்.

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை இந்தத் தகவலை உறுதி செய்யவில்லை.

First published:

Tags: Sivakarthikeyan, Venkat Prabhu