தல ரவுண்டு கட்டி அடிச்சிருக்கார் - சிவகார்த்திகேயன்

விஸ்வாசம் படம் குடும்பத்தின் அவசியத்தைப் பேசும் படமாக அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர். படத்தின் முதல்நாள் முதல்காட்சியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இன்று அதிகாலை முதலே திரையரங்குகளில் குவியத் தொடங்கினர்.

Web Desk | news18
Updated: January 10, 2019, 5:55 PM IST
தல ரவுண்டு கட்டி அடிச்சிருக்கார் - சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
Web Desk | news18
Updated: January 10, 2019, 5:55 PM IST
இன்று வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்கள் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து கூறியுள்ளார்.

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தம்பி ராமையா, ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இன்று வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் குடும்பத்தின் அவசியத்தைப் பேசும் படமாக அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர். படத்தின் முதல்நாள் முதல்காட்சியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இன்று அதிகாலை முதலே திரையரங்குகளில் குவியத் தொடங்கினர்.

படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் விஸ்வாசம் குறித்து கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், “தல ரவுண்டு கட்டி அடிச்சிருக்கார். கொண்டாட்டம், நகைச்சுவை கலந்த மாஸ் பேக்கேஜாக படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தை கொடுத்ததற்காக இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் இமான், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினருக்கு எனது நன்றி” என்று கூறியுள்ளார்.

அதேபோல் பேட்ட படம் குறித்து, படம் முழுக்க மாஸ் ஸ்டைலான காட்சிகள், அனிருத்தின் இசை வேற லெவல். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

பேட்டையா? விஸ்வாசமா?... ரசிகர்களின் சாய்ஸ் என்ன? - வீடியோ

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...