• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கௌதம் வலையில் விழுந்த சிவகார்த்திகேயன்...!

கௌதம் வலையில் விழுந்த சிவகார்த்திகேயன்...!

கௌதம் வாசுதேவ் மேனன்

கௌதம் வாசுதேவ் மேனன்

தற்போது ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸுக்காக சிம்புவை வைத்து இரண்டு படங்கள் இயக்க ஒப்பந்தம் போட்டுள்ளார் கௌதம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கௌதம் வாசுதேவ மேனனின் படத்தில் நடிக்கிறார் என்றால், கசாப்புகடை ஆட்டை பார்ப்பது போல் அந்த நடிகரைப் பார்க்கிறார்கள் ரசிகர்கள். கௌதம் படம் எடுத்து அது எப்போது கரை சேரப்போகிறது என்ற ஆதங்கம்தான் காரணம். இந்த உலக நடப்பு தெரியாமல் அவரிடம் தலையை கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 

நடிகர்களில் சிம்பு என்றால் இயக்குனர்களில் கௌதம். எப்போது இவர்களின் படம் முடியும் என்றோ, வெளியாகும் என்றோ யாருக்கும் தெரியாது. அதேபோல் தொடங்கிய படங்களைவிட அறிவிப்போடு கைவிடப்பட்ட படங்கள் அதிகம். கடைசியாக வெளிவந்த அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா இரண்டும் பல வருடங்கள் அண்டர்புரொடக்ஷனில் இருந்தவை. இந்தப் படங்களுக்கு முன்பு விக்ரமை வைத்து தொடங்கிய துருவநட்சத்திரம் இன்னும் வெளிவராமல் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸுக்காக சிம்புவை வைத்து இரண்டு படங்கள் இயக்க ஒப்பந்தம் போட்டுள்ளார் கௌதம். அதில் முதல் படம், வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவும் கௌதம் ஒப்புக் கொண்டுள்ளார். தயாரிப்பு ஐசரி கணேஷ்

Also read... ராம் சரண் படத்தில் ஷங்கருடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்!

இதில் வேடிக்கை, இவரது தயாரிப்பில் ஜோஷ்வா இமைபோல் காக்க என்ற படத்தை கௌதம் ஏற்கனவே எடுத்து முடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் மேலும், மூன்று படங்கள் இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: