ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'எல்லாம் உங்களுக்காக.. மாறுபட்ட கதைக்களத்துக்கு முயற்சி பண்றேன்' - உருகி பேசிய சிவகார்த்திகேயன்!

'எல்லாம் உங்களுக்காக.. மாறுபட்ட கதைக்களத்துக்கு முயற்சி பண்றேன்' - உருகி பேசிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

டான் திரைப்படத்தை தொடர்ந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    'எல்லாம் உங்களுக்காக, மாறுபட்ட கதைக்களத்துக்கு முயற்சி பண்றேன்' என்று சிவகார்த்திகேயன் உருகி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    டான் திரைப்படத்தை தொடர்ந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். தமிழக இளைஞனுக்கும் UK பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் குறித்து நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர்.

    படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா மற்றும் மாநாடு படத்தை எடிட்டிங் செய்த பிரவீன் ஆகியோர் பிரின்ஸ் படத்தில் இணைந்திருக்கிறார்கள். மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

    இந்த திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியிருந்தனர்.  படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் பிரின்ஸ் திரைப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளனர்.  இதனால் குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பத்தோடு இப்படத்தைப் பார்க்கலாம் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 23 நிமிடம் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு  கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.  இந்தப் படங்களுக்கான புரமோஷன் நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, லவ் யூ ஆல்... எல்லாவிதமான சப்போர்ட்டிற்கும் நன்றி, நீங்களும் அன்ப கொடுத்துட்டே இருங்க, நானும் அன்ப கொடுத்துட்டே இருக்கேன்.

    Also read... கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. வரிசைக் கட்டும் படங்கள்.. தீபாவளிக்கு ரிலீசாகும் மூவி லிஸ்ட்!

    அக்டோபர் 21-ம் தேதி உங்களுக்கு தெரியும் பிரின்ஸ் வெளியாகுது. குடும்பத்தோட போய் எல்லாரும் படத்த பருங்க. ரொம்ப சிம்பிளான படம் தான்... நான் சொன்னதுலாம் படத்துல இருக்கும் நீங்க குடும்பத்தோட போய் படத்த பாத்துட்டு ஜாலியா சிரிச்சுட்டு வந்து நீங்கபாட்டுக்கு உங்க வேலைய செய்யலாம். அப்படிதான் அந்த படம் இருக்கும்.

    அடுத்தடுத்து மாறுபட்ட கதக்களத்துள நான் முயற்சி பன்றேன். அந்த முயற்சிலாம் நான் எடுக்க காரணம் உங்கள எப்படியாச்சும் சந்தோசப்படுத்தனும்னுதான். அதுக்காக என்னோட வேலைகளை நான் பன்னிட்டே இருக்கேன் நீங்க தொடர்ந்து எனக்கு ஆதரவு தரனும் நன்றி என்று அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Sivakarthikeyan