ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மண்டேலா இயக்குனரின் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

மண்டேலா இயக்குனரின் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக டாக்டர் வெளியானது. அதையடுத்து டான் படத்தை முடித்துள்ளார். இவை தவிர அயலான் படம் பல வருடங்களாக அண்டர் புரொடக்ஷனில் உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்த வருடம் வெளியான படங்களில் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற படம் மண்டேலா. இதனை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக டாக்டர் வெளியானது. அதையடுத்து டான் படத்தை முடித்துள்ளார். இவை தவிர அயலான் படம் பல வருடங்களாக அண்டர் புரொடக்ஷனில் உள்ளது. அடுத்து இரு படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஒன்று, ஜதி ரத்னலு தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப்பின் படம். இது ஃப்ரீ புரொடக்ஷன் நிலையில் உள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படத்தை எடுக்க உள்ளனர்.

இரண்டாவது படம், சிங்க பாதை. இந்த வருட ஆரம்பத்தில் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் படத்தை தயாரிப்பதாகவும் கூறினர். ஆனால், டாக்டர் படம் வெளியீட்டில் பிரச்சனை ஏற்பட்ட பின் சிவகார்த்திகேயனுக்கும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷுக்கும் இடையே சுமூக நட்பு இல்லை என கூறப்படுகிறது.

அதனால் சிவகார்த்திகேயன் சிங்க பாதை படத்தை வேண்டுமென்றே கிடப்பில் போட்டிருப்பதாக தகவல். ராஜேஷுக்கு பதில் லைகா அல்லது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத்தை தயாரிக்கலாம் என கூறப்பட்டது.

Also read... இந்தியாவில் அவென்ஜர்ஸ் சாதனையை ஸ்பைடர் மேன் முறியடிக்குமா?

இந்நிலையில் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

First published:

Tags: Sivakarthikeyan