முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21 படத்தின் மாஸான டைட்டில் இது தான்!

சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21 படத்தின் மாஸான டைட்டில் இது தான்!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான சிவகார்த்திகேயனின் 'டான்' நல்ல வசூலை பெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிவகார்த்திகேயனின் 21-வது படத்திற்கு மாவீரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 21-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 'எஸ்கே 21' என்றழைக்கப்பட்டு வந்த இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிப்பதாகவும், படத்திற்கு 'மாவீரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

'எஸ்கே 21' என்றழைக்கப்படும் 'மாவீரன்' படப்பிடிப்பு இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு, சமீபத்தில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லைக்ஸை குவிக்கும் வீடியோ!

இதற்கிடையே, கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான சிவகார்த்திகேயனின் கல்லூரி படமான 'டான்' நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில், தமிழ்-தெலுங்கு என இருமொழியில் உருவாகி வரும் 'எஸ்கே 20' படத்திற்கான படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். தவிர அந்தப் படத்தில் அவர் பள்ளி ஆசிரியராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Sivakarthikeyan, Tamil Cinema