ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெள்ளித்திரையில் டானாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்!

வெள்ளித்திரையில் டானாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் ஆண் ரசிகர்களுக்கும் பிடித்த டான் ஆனது அதிசயமில்லையே.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சினிமா பின்புலம் இல்லாமல் சின்னத்திரையில் முகம் காட்டி தற்போது வெள்ளித்திரையில் டானாக உயர்ந்து நிற்கும் சிவ கார்த்திகேயனின் திரைப் பயணத்தை பற்றிய தொகுப்பு. 

சின்னத்திரையில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் ‘ முதல் டைட்டில் வின்னர் ஆனதில் தொடங்கியது இவரது பயணம். 2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார். அது முதல் இவரின் சின்ன சின்ன குறும்புகளும்…  சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் மனம் கொத்தி பறவையாய் தமிழக திரை ரசிகர்களை கொத்தி சென்றது.

இதையும் படிங்க.. ஒரே நாளில் சூர்யவை மாற்றிய வெண்ணிலா.. காற்றுக்கென்ன வேலி சீரியலில் சரியான ட்விஸ்ட்!

தன் இயல்பான நடிப்பாலும், எதார்த்த பேச்சினாலும் மக்கள் மனதில் விரைவாக இடம்பிடித்தார் சிவகார்த்திகேயன். ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னணி கதானாயகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் இந்த மனம் கொத்தி நாயகன். திரை ரசிகர்களின் தளபதி விஜய் ஒரு மேடையில் ‘குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோ சிவகார்த்திகேயன்’ என சொன்னது வைரல் ஆனது….. தனுஷோடு " மூணு "திரைப்படத்தில் ஆரம்பித்த நட்பு சிவகார்த்திகேயனை வெள்ளி திரையில் எதிர் நீச்சல் போட ஆயத்தமாக்கியது.

sivakarthikeyan sk movies list actor sivakarthikeyan career next release don sj surya priyanka mohan sivangi
நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழக இளைஞர்களின் கனவு கன்னிகள் இந்த கதாநாயகனின் நாயகிகள் ஆனார்கள்….. நயன்தாரா முதல் ஹன்சிகா வரை சிவகார்த்திகேயனின் கதாநாயகிகள் ஆனார்கள். சாமானிய மனிதனின் கனவொன்று சரித்திரம் ஆகியது…… ’மான் கராத்தே’ பீட்டரும்….’காக்கிச்சட்டை’ மதிமாறனும்…...ரஜினி முருகனின் ரஜினி முருகனும் ரசிகர்களிடம் கூடு விட்டு கூடு பாய்ந்தனர்…. சிவ கார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தமிழக பட்டிதொட்டியெங்கும் கிளை பரப்பி……. ஊதா கலர் ரிப்பன் யார் உனது அப்பன் பாடல் இளைஞர்களை கவர்ந்தது.

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டம்..கெரியரில் ஜெயித்து கார் வாங்கிய விஜய் டிவி நாஞ்சில் விஜயன்!

கண் இமைக்கும் நேரத்தில் கதாநாயகர்களில் முன்னணி வந்து தயாரிப்பாளர்களின் மோஸ்ட் வாண்டேட் ஹீரோ ஆனதோடு குழந்தைகளின் மோஸ்ட் வாண்டேட் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார் சிவகார்த்திகேயன். 'ரெமோ' திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்து குழந்தைகளுக்கு பிடித்தமான நடிகர் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். பெண் ரசிகர்களின் நம்ம வீட்டு பிள்ளை ஆன சிவகார்த்திகேயன் ஆண் ரசிகர்களுக்கும் பிடித்த டான் ஆனது அதிசயமில்லையே.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Kollywood, Sivakarthikeyan, Tamil Cinema