சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு!

SK16 படத்தின் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

news18
Updated: August 9, 2019, 3:04 PM IST
சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு!
sk16 படக்குழு
news18
Updated: August 9, 2019, 3:04 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK16 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் SK16. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப்படத்தில் சிவகர்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.


Also read... மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேதுபதிக்கு விருது!

படத்தில் நகைச்சுவை நடிகர்களாக யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மற்றும் சதுரங்கவேட்டை பட நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Loading...
அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...