Home /News /entertainment /

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

டாக்டர் ஃபர்ஸ்ட் லுக்

டாக்டர் ஃபர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'டாக்டர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம்  ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் அதை இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெறச் செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Here is the first look of my next #DOCTOR 😊👍#DoctorFirstLook pic.twitter.com/ztqfkG4TUY

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 17, 2020

மேலும் படிக்க: பர்தா குறித்த சர்ச்சை... தஸ்லீமா நஸ்ரினுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மகள் பதிலடி!
Published by:Sheik Hanifah
First published:

Tags: Doctor, Sivakarthikeyan

அடுத்த செய்தி