Home /News /entertainment /

வரவேற்பை பெறும் லிங்குசாமியின் ‘தி வாரியர்’ பட ட்ரெய்லர்

வரவேற்பை பெறும் லிங்குசாமியின் ‘தி வாரியர்’ பட ட்ரெய்லர்

தி வாரியர்

தி வாரியர்

The Warrior Trailer : தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இம்மாதம் 14-ம்தேதி தி வாரியர் படம் திரைக்கு வருகிறது.

    லிங்கு சாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள தி வாரியர் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

    தெலுங்கு நட்சத்திரம் ராம் பொதினேனி, கிரீத்தி ஷெட்டி, ஆதி உள்ளிட்டோர் நடிப்பில் தி வாரியர் என்ற திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

    தி வாரியர் படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘தி வாரியர் படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.



    இதையும் படிங்க - 2022-ல் அதிக வசூலை அள்ளிய படங்கள்!

    இதற்கு பதில் அளித்துள்ள ஹீரோ ராம், நன்றி சகோதரரே என்று கூறியுள்ளார். தமிழில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பீமா, பையா, அஞ்சான் உள்பட பல மாஸ் ஆக்சன் படங்களை அளித்த லிங்குசாமி நீண்ட இடைவேளைக்கு பின்னர் தி வாரியர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    ட்ரெய்லரைப் பார்க்க…



    மதுரையை மையமாக வைத்து படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், போலீஸ் அதிகாரியாக ராமும், ரவுடி வில்லனாக ஆதியும் நடித்துள்ளனர். ட்ரெய்லரில் இடம்பெறும் இருவருக்கும் இடையிலான மோதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

    இதையும் படிங்க - பிரபல நடிகையின் ஜிம் வொர்கவுட் புகைப்படம்.. யாரென்று தெரிகிறதா?

    தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  இம்மாதம் 14-ம்தேதி தி வாரியர் படம் திரைக்கு வருகிறது.
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி