’அருவி’ இயக்குநருடன் இணைந்த சிவகார்த்திகேயன்!

news18
Updated: June 3, 2019, 1:16 PM IST
’அருவி’ இயக்குநருடன் இணைந்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன்
news18
Updated: June 3, 2019, 1:16 PM IST
அருவி படத்தின் இயக்குநரின் அடுத்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 4 படங்கள் உருவாகி வருகிறது. இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமாருடன் ஒரு படம். இரும்புத்திரை இயக்குநர் மித்ரனுடன் ஹீரோ, பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய படங்களில் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் கனா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் 3-வது படத்தை அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்க இருப்பதாக அறிவித்தார். படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

மேலும் பேசிய அவர், “இனிமேல் எனது படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாகவே இருக்கும். அதை நான் இப்போது உறுதியாக சொல்கிறேன்” என்றார்.

வீடியோ பார்க்க: இயக்குனர்களின் குரு மணிரத்னம்...!

First published: June 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...