Home /News /entertainment /

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ப்ரின்ஸ்…

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ப்ரின்ஸ்…

ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன்

ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன்

Prince Updtate : ப்ரின்ஸ் படத்தை தீபாவளியையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் தற்போது நடித்து வரக்கூடிய பிரின்ஸ் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரேன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

    இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும்  சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

    படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா மற்றும் மாநாடு படத்தை எடிட்டிங் செய்த பிரவீன் ஆகியோர் பிரின்ஸ் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

    AK61: அஜித்தின் ஏகே61 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்?

    இந்த படத்தை தீபாவளியையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரின்ஸ் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடிக்கிறார்.

    பொன்னியின் செல்வன் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஆடித் திருநாள் கொண்டாட்டத்திற்கு ரெடியா?

    தேசிய விருது பெற்ற மடோனே அஸ்வின்  இந்த படத்தை இயக்குகிறார் என்பதால், மாவீரன் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Sivakarthikeyan

    அடுத்த செய்தி