Home /News /entertainment /

பிரின்ஸ் படத்திலிருந்து 2-வது சிங்கிள் நாளை ரிலீஸ்!

பிரின்ஸ் படத்திலிருந்து 2-வது சிங்கிள் நாளை ரிலீஸ்!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்

முன்னதாக பிரின்ஸ் படத்திலிருந்து வெளியான பிம்பிலிக்கி பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாளை இரண்டாவது பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பிரின்ஸ் படத்திலிருந்து 2-வது சிங்கிள் நாளை மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் தற்போது நடித்து வரக்கூடிய பிரின்ஸ் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரேன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

    இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்சன்ஸ் இந்த   படத்தை தயாரிக்கின்றன.

    Also read... இந்தியன் 2 படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்கிறார் கமல்ஹாசன்!

    படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா மற்றும் மாநாடு படத்தை எடிட்டிங் செய்த பிரவீன் ஆகியோர் பிரின்ஸ் படத்தில் இணைந்திருக்கிறார்கள். மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.



    முன்னதாக பிரின்ஸ் படத்திலிருந்து வெளியான பிம்பிலிக்கி பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாளை இரண்டாவது பாடலின் லிரிக்கள் வீடியோவை வெளியிடுவது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நாளை மாலை 5.30 மணிக்கு ஜெசிக்கா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Sivakarthikeyan

    அடுத்த செய்தி