ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு…

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு…

பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன்

இந்தாண்டு தீபாவளி ரேஸில் பிரின்ஸ் திரைப்படம் வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

  நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து ,கேவீ அனுதீப் இயக்கிய பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளிவந்தது. இந்த படத்தை ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடெக்சன்ஸ், இணைந்து தயாரித்துள்ளது. தமன் இசையில் உருவான இத்திரைப்படத்தில் சிவாவுடன் மரியா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  பொதுவாகவே சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் காதலும், காமெடியும் கலந்திருக்கும். அதனால் இந்தாண்டு தீபாவளி ரேஸில் பிரின்ஸ் திரைப்படம் வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்தனர். மேலும் கார்த்தியின் சர்தார் படத்தை தவிர்த்து, இந்த தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் திரைப்படம் எதுவும் வெளியாகாத நிலையில், பிரின்ஸ் திரைப்படம் இந்த தீபாவளிக்கு அதிக கவனம் பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

  Thalapathy Vijay: விடுமுறை ஓவர்... வாரிசு செட்டுக்கு திரும்பிய விஜய்!

  ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக மிகப்பெரும் ஏமாற்றத்தை பிரின்ஸ் படம் அளித்தது. முதல் நாளே கலவையான விமர்சனங்கள் வெளிவந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் படத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் இருந்தனர்.

  இருப்பினும், பிரின்ஸ் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. டாக்டர், டான் படத்தை தொடர்ந்து பிரின்ஸ் படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை சிவகார்த்திகேயன் பதிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு தோல்வியில் முடிந்தது.

  விஜயின் ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்.. வைரல் ரீல்ஸ் வீடியோ

  இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படம் வரும் 25ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  சிவகார்த்திகேயன் தற்போது மடோனே அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இடம்பெற்றுள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Sivakarthikeyan