ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவளிக்கு எது டாப்... பிரின்ஸ் மற்றும் சர்தார் படத்தின் முதல் நாள் வசூல்

தீபாவளிக்கு எது டாப்... பிரின்ஸ் மற்றும் சர்தார் படத்தின் முதல் நாள் வசூல்

தீபாவளி படங்கள்

தீபாவளி படங்கள்

டான் திரைப்படத்தை விட குறைவாக வசூல் செய்த  சிவகார்ர்திகேயனின் பிரின்ஸ் 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் பிரின்ஸ் திரைப்படம் முதல் நாளில் 3 கோடியே 90 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. அதேபோல் கார்த்தியின் சர்தார் திரைப்படம் முதல் நாளில் 4 கோடியே 15 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21-ம் தேதியே சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.  முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாத நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக பிரின்ஸ் திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என கணிக்கப்பட்டது.

ஆனால்,இரண்டு திரைப்படங்களுக்குமே முன் பதிவில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பிரின்ஸ், சர்தார் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின. இதில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் முதல் நாளில் 3 கோடியே 90 லட்சம் வசூலித்துள்ளது.

இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் முதல் நாளில் 7 கோடியே 30 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்ததாக சினிமா துறையில் கூறுகின்றனர். அந்த படத்தை விட மிகக் குறைந்த அளவிலேயே பிரின்ஸ் திரைப்படம் வசூலித்துள்ளது. அதேபோல் நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் முதல் நாளில் 4 கோடியே 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.

Read More: தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் முதல் சிங்கிள் குறித்து அப்டேட் கேட்ட ரசிகர்... சர்பிரைஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

இது கார்த்தியின் திரைப்படங்களுக்கு வழக்கமாக இருக்கும் ஓப்பனிங் என கூறுகின்றனர். இதில் சர்தார் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு பிறகு வரவேற்பு அதிகரித்துள்ளது. அதேபோல் பிரின்ஸ் திரைப்படத்திற்கு முதல் காட்சிக்கு பிறகு ரசிகர்களின் வரவே குறைந்துள்ளது என திரையரங்கு வட்டாரத்தில் கூறுகின்றனர்.

Published by:Srilekha A
First published:

Tags: Actor Karthi, Sivakarthikeyan