Sivakarthikeyan: பிரமாண்டமாக உருவாகும் அயலான் - சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் இது தான்!

அயலான்

சிவகார்த்திகேயன் அளவுக்கு ஏலியன் ஒன்றும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.

  • Share this:
    பிரமாண்டமாக தயாராகும் சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம் அயலானில், மினரல் வாட்டர் விநியோகிப்பவராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

    ‘ரெமோ’ வெளிவந்த போதே ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சயின்ஸ் பிக்ஷன் படமொன்றில் நடிப்பதாக முடிவானது. தயாரிப்பு சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டிராஜா. அவர்தான் ரெமோ படத்தையும் தயாரித்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக வேலைக்காரன், சீமராஜா படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த ரவிக்குமாரின் சயின்ஸ் பிக்ஷனுக்கு சிக்கல் ஏற்பட்டது. ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம் என பெரிய அளவில் திட்டமிட்டிருந்த படம் கிடப்பில் போடப்பட்டது. சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் உள்பட வேறு பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு படங்கள் நடித்துத் தர தொடங்கினார்.

    நீண்ட இடைவெளிக்குப் பின் ஆர்.டிராஜாவுடன் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து சயின்ஸ் பிக்ஷனுக்கு உயிர் கொடுத்தனர். படத்துக்கு அயலான் என பெயரும் வைத்தனர். பி.சி.ஸ்ரீராமுக்கு பதில் நீரவ் ஷா ஒப்பந்தமானார். இசை, அதே ரஹ்மான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சிவகார்த்திகேயன் அளவுக்கு ஏலியன் ஒன்றும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. சிஜி-க்கு பல கோடிகள் ஒதுக்கியிருக்கிறார்கள். டிசம்பரில் படத்தை எப்படியும் வெளியிடுவது என்ற முனைப்பில் பட வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் மினரல் வாட்டர் விநியோகிப்பவராக சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் இதில் நாயகியாக நடித்துள்ளார்.

    அயலான் தவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் ’டாக்டர்’, ’டான்’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இதில் டாக்டர் திரைப்படம் ஏற்கனவே முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. டாக்டரை தொடர்ந்து அயலானும், அதன் பிறகு டானும் திரைக்கு வரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: