HOME»NEWS»ENTERTAINMENT»cinema sivakarthikeyan petrol diesel price old tweet scs

Sivakarthikeyan: 'அப்போ பேசுனீங்களே, இப்போ பேசுங்க' - சிவகார்த்திகேயனுக்கு நெட்டிசன்கள் கேள்வி!

விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளை தவிர்த்து விட்டு, சிரித்தவாறு அங்கிருந்து கிளம்பினார்.

Sivakarthikeyan: 'அப்போ பேசுனீங்களே, இப்போ பேசுங்க' - சிவகார்த்திகேயனுக்கு நெட்டிசன்கள் கேள்வி!
சிவகார்த்திகேயன்
  • Share this:

பெட்ரோல் விலை குறித்து 2012-ம் ஆண்டு ட்வீட் செய்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஏன் வாய் திறக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் சமீபமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மக்கள் எதிர்பாராத அளவு உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் விரைவில் 100-ஐ தொடும் எனத் தெரிகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும், ஒருசில திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Sivakarthikeyan on Petrol Diesel price
2012-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் போட்ட ட்வீட்




இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கடந்த 2012-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் போட்ட ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் பெட்ரோல் பேங்க் ஊழியர் எவ்வளவுக்கு பெட்ரோல் வேண்டும் என கேட்டதாகவும், ஒரு 2 ரூபாய்க்கோ, 4 ரூபாய்க்கோ கொஞ்சம் தெளித்து விடுங்கள், வண்டியை கொளுத்தி விட்டு போகிறேன் என பொதுமக்கள் சொல்வதாகவும், ஜோக் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Thalapathy Vijay: விஜய்யுடன் நடித்த குட்டிப்பாப்பா இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

இதற்கிடையே சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றதும் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல் முறையாக ஒரு குழந்தை தனக்கு பிடித்த இடத்திற்கு செல்லும் போது எப்படி இருக்குமோ அதே போன்று கோட்டைக்கு வந்ததை தான் உணர்ந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளை தவிர்த்து விட்டு, சிரித்தவாறு அங்கிருந்து கிளம்பினார்.

அதனால் 2021-ம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ட்வீட் போட்ட சிவகார்த்திகேயன், இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: