சிவகார்த்திகேயனின் மார்க்கெட், படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் மிகப்பெரிய வசூலை பெற்றது.
பொங்கலுக்கு திரைக்கு வந்த தெலுங்கு திரைப்படம் பங்கார்ராஜுவை இயக்கிய கல்யாண் கிருஷ்ணாவின் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்கார்ராஜு நாக சைதன்யாவும் அவரது தந்தை நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த திரைப்படம். பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அப்படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணனுக்கு அட்வான்ஸ் வழங்கியது
தமிழின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன்.
இதையும் படிங்க.. பிக் பாஸ் வனிதா மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்.. அப்படி என்ன செய்தார்?
அவர்களது தயாரிப்பில் அடுத்தப் படத்தை கல்யாண் கிருஷ்ணன் இயக்கயிருக்கிறார். இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் கல்யாண் கிருஷ்ணா இணையும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உள்ளார்.
இதையும் படிங்க.. அம்மாவையும் என்னையும் ஏன் இப்படி பேசுறீங்க? வேதனையில் அர்ச்சனா மகள் சாரா போட்ட போஸ்ட்!
டான் படத்தை முடித்த சிவகார்த்திகேயன் அடுத்து, ஜதிரத்னலு தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் நேரடி தெலுங்குப் படமொன்றில் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்தில் அவர் நடிக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்தத் தகவல்களை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது முக்கியமானது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.