நம்ம வீட்டுப் பிள்ளை முதல் பாடல்: தலைப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

news18
Updated: August 21, 2019, 8:03 PM IST
நம்ம வீட்டுப் பிள்ளை முதல் பாடல்: தலைப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!
சிவகார்த்திகேயன்
news18
Updated: August 21, 2019, 8:03 PM IST
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.


படத்தில் நகைச்சுவை நடிகர்களாக யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம்  வெளியிட்டது. நம்ம வீட்டுப் பிள்ளை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘எங்க அண்ணன்’ பாடலை வரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Loading...

இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, நாகாஷ் அஜிஸ், சுனிதி சௌஹான் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த அறிவிப்பால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.படிக்க: பாவாடையில் யோகி பாபு; கவர்ச்சி நடனத்தில் யாஷிகா - ஜாம்பி ட்ரெய்லர் ரிலீஸ்

வீடியோ பார்க்க: அடுத்தடுத்து தயாராகும் மெகா பட்ஜெட் படங்கள்

First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...