• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sivakarthikeyan: தந்தை பெயரையே மகனுக்கு சூட்டிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan: தந்தை பெயரையே மகனுக்கு சூட்டிய சிவகார்த்திகேயன்!

மகனுடன் சிவகார்த்திகேயன்

மகனுடன் சிவகார்த்திகேயன்

தனது அப்பாவின் பெயரையே மகனுக்கு சூட்டியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

  • Share this:
    நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன் தாஸ் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

    தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்து இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர், அயலான் ஆகியப் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதோடு ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார் சிவா.

    இவருடைய மனைவி ஆர்த்தி. சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். தனது எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த ’கனா’ படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை மகளுடன் இணைந்து பாடியிருப்பார் சிவகார்த்திகேயன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்நிலையில் தனது மகனுக்கு குகன் தாஸ் எனப் பெயரிட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். "எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. உங்கள் அன்போடும் ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    18 வருடங்களுக்குப் பிறகு அப்பாவே மகனாய் பிறந்திருக்கிறார் எனத் தெரிவித்திருந்த சிவகார்த்திகேயன், தற்போது அவரது பெயரான ‘தாஸ்’ என்பதை மகனுக்கு வைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: