‘நம்ம வீட்டுப் பிள்ளை'... இரண்டாவது போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

Web Desk | news18
Updated: August 12, 2019, 12:29 PM IST
‘நம்ம வீட்டுப் பிள்ளை'... இரண்டாவது போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு
Web Desk | news18
Updated: August 12, 2019, 12:29 PM IST
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

படத்தில் நகைச்சுவை நடிகர்களாக யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நம்ம வீட்டுப் பிள்ளை என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது



மேலும் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்



Also watch

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...