நடிகர் சிவகார்த்திகேயனை சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஒரு மணி நேரம் பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
டாக்டர், டான் என அடுத்தடுத்து 2 வெற்றிப் படங்களை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளார். இந்த இரு படங்களும் வசூலில் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளன.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர்த்து மாவீரன் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க - கே.ஜி.எப் 2 வெற்றி - சம்பளத்தை உயர்த்திய நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி
குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக சிவகார்த்திகேயனின் டான் அமைந்தது. முதல் பாதி காதல், கல்லூரி என கலகலப்பாக நகரும் படம், இரண்டாவது பாதியில் சென்டிமென்ட் காட்சிகளுடன் ரசிகர்கள் பலரை எமோஷனலாக வைத்தது.
இந்நிலையில், டான் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு ரஜினியின் இல்லத்தில் வைத்து நடந்துள்ளது.
இதையும் படிங்க - இந்தமுறை நான் அடிக்குற அடி.. மரண அடி... மாஸ் ஆக்ஷனுடன் வெளியான தி லெஜண்ட் ட்ரைலர்
சுமார் ஒரு மணிநேரமாக சிவகார்த்திகேயனுடன் டான் படம் குறித்தும், சினிமா தொடர்பாகவும் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இறுதியாக இந்த சந்திப்பு குறித்த ஃபோட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். இவர் அடுத்ததாக இயக்கிய பீஸ்ட் திரைப்படம் சறுக்கலை சந்தித்தது. இதே நெல்சன்தான் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 169வது படத்தை இயக்கவுள்ளார்.
நெல்சனும், சிவகார்த்திகேயனும் நெருக்கமானவர்கள் என்ற நிலையில் சிவகார்த்திகேயன் உடனான ரஜினியின் சந்திப்பு நடந்திருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.