• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு - வைரலாகும் படம்!

நடிகர் கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு - வைரலாகும் படம்!

சிவகார்த்திகேயன் - கவுண்டமணி

சிவகார்த்திகேயன் - கவுண்டமணி

மூத்த காமெடி நடிகர் கவுண்டமணியுடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

  • Share this:
    நடிகர் கவுண்டமணியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது. அதோடு இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் ‘அயலான்’ படத்திலும் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

    இதையடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 19-வது திரைப்படமாகும். இதை இயக்கும் சிபி சக்ரவர்த்தி, இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். டாக்டர் படத்தைத் தொடர்ந்து பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் மூத்த காமெடி நடிகர் கவுண்டமணியுடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். நீண்ட நாள் கழித்து கவுண்டமணியை பார்த்த மகிழ்ச்சியை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: