Home /News /entertainment /

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தை தீபாவளிக்கு முன்னரே வெளியிட படக்குழு திட்டம்..

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தை தீபாவளிக்கு முன்னரே வெளியிட படக்குழு திட்டம்..

பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன்

வாய்ப்புள்ளதால் ஒட்டுமொத்தமாக 5 நாட்களுக்கு பிரின்ஸ் படம் நல்ல வசூலை பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பிரின்ஸ் திரைப்படத்தை தீபாவளிக்கு முன்னரே வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன், உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது.

    இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். முழு நீள காமெடி திரைப்படமாக பிரின்ஸ் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    பிரின்ஸ் படத்திலிருந்து வெளியான பிம்பிலிக்கி பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பின்னர் சத்யராஜ் -  சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

    எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமலே இவ்ளோ அழகா! மடோனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

    டாக்டர் மற்றும் டான் படங்கள் வெற்றி பெற்றிருப்பதால் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த நிலையில் படத்தை அக்டோபர் 21-ஆம்  தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    தீபாவளி பண்டிகை 24-ஆ தேதி வருகிறது. இதற்கு மறுநாளும் விடுமுறையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதால் ஒட்டுமொத்தமாக 5 நாட்களுக்கு பிரின்ஸ் படம் நல்ல வசூலை பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர் உள்ளனர்.

    விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. பிரின்ஸ் படத்தை தொடர்ந்து அயலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

    இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அயலான் படத்தை கிறிஸ்துமஸ் - புத்தாண்டு விடுமுறை நாட்களில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Sivakarthikeyan

    அடுத்த செய்தி