Home /News /entertainment /

சிவகார்த்திகேயனின் 'டான்' ட்ரெய்லர் ரிலீஸ்... ரசிகர்கள் ரியாக்சன் என்ன?

சிவகார்த்திகேயனின் 'டான்' ட்ரெய்லர் ரிலீஸ்... ரசிகர்கள் ரியாக்சன் என்ன?

ட்ரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது

ட்ரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அட்லீயிடம் உதவியாளராக இருந்தவர். இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. ட்ரெய்லர் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் - சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் டான் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த வாரம் படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அட்லீயிடம் உதவியாளராக இருந்தவர். இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.


மே 13-ம்தேதி வெள்ளிக்கிழமையன்று டான் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

டான் ட்ரெய்லர்



ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள், சிறப்பாக உள்ளதென கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Musthak
First published:

Tags: Sivakarthikeyan

அடுத்த செய்தி