தமிழக இயல், இசை, நாடகமன்றத்தின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டு நேற்று முதல்வர் கையால் வழங்கப்பட்டன.
நடிகர்கள், நடிகைகள், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 134 பேருக்கு விருது வழங்கப்பட்டது. குறிப்பாக சிவகார்த்திகேயன், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், கெளதம் மேனன், கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
Sivakarthikeyan: கலைமாமணி விருதை அம்மாவிடம் சமர்ப்பித்த சிவகார்த்திகேயன்!

தந்தையும் மகனும் விருது பெற்ற தருணம்
இதில் கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் அந்த விருதை தனது தாய்க்கு சமர்ப்பித்தார். இந்நிலையில் பொறுப்பான காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய சிவகார்த்திகேயனின் தந்தை, மறைந்த தமிழக முதல்வர் கலைஞரிடம் விருது பெறும் புகைப்படத்தையும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கலைமாமணி விருது பெறும் புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.
இந்த நெகிழ்வான தருணம் பார்ப்போர் உள்ளங்களை கவர்ந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்