Beast: விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்!

விஜய் - சிவகார்த்திகேயன்

பீஸ்ட் படத்தில் பாடல் எழுதுவதுடன் பாடவும் செய்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். நடிகராக அல்ல, பாடலாசிரியர் மற்றும் பாடகராக.

    பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இவரது இசையில் உருவாகும் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதி பாட இருக்கிறார். இதற்கு முன் அனிருத் இசையில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய, கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசுல பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானது. நெல்சன் திலீப்குமாரின் அடுத்தப் படம் டாக்டரில் சிவகார்த்திகேயன் நடித்தார். படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திலும் இரு பாடல்களை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இப்போது பீஸ்டிலும் எழுதயிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அனிருத் இசையில் மட்டுமின்றி டி.இமான் (நம்ம வீட்டுப் பிள்ளை), ராஜ் ஆர்யன் (கூர்க்கா), ராடன் (ஆதித்ய வர்மா) ஆகிய இசையமைப்பாளர்களின் இசையிலும் சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதியுள்ளார்.

    அதேபோல் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, மான் கராத்தே, மாப்ள சிங்கம், ரஜினி முருகன், கனா, மிஸ்டர் லோக்கல் உள்பட பல படங்களில் அவர் பாடவும் செய்துள்ளார். பீஸ்ட் படத்தில் பாடல் எழுதுவதுடன் பாடவும் செய்கிறார் என்பது தகவல்.

    சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் தாணு மற்றும் ஏஜிஎஸ்ஸுக்கு தலா ஒரு படம் நடித்துத்தர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: