ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் ஒரு பிரம்மாண்டம்.. பூர்வீக கிராமத்தில் புது வீடு கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

மீண்டும் ஒரு பிரம்மாண்டம்.. பூர்வீக கிராமத்தில் புது வீடு கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

தனது பூர்வீக இடத்தில் சிவகார்த்திகேயன் வீடு கட்டி இருப்பது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நடிகர் சிவகார்த்திகேயன் தனது பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில் புதுவீடு கட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

  எந்தவித சினிமா பின்புலம் இல்லாமல் சின்னத்திரையில் முகம் காட்டி அதன் மூலம் கிடைத்த வரவேற்பினால் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து,  இன்று டாப் ஹீரோக்கள் லிஸ்டில் தடம் பதித்துள்ளார் சிவகார்த்திகேயன். சினிமாவை தாண்டி சிவாவின் குடும்பமும் ஒவ்வொரு துறையில் சாதித்து தனி பெயரை சம்பாதித்து வைத்துள்ளார்கள். இந்தியாவின் தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்களான சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத்தாத்தாக்கள். இந்த தகவல் சில மாதங்களுக்கு முன்பு தான் இணையத்தில் வைரலானது. இவர்களை 'திருவீழிமிழலை சகோதரர்கள்’ என குறிப்பிட்டால் அனைவரும் எளிதில் அடையாளம் கண்டுக் கொள்வார்கள்.

  இதையும் படிங்க.. நிச்சயதார்த்தம் முடிந்தது... அடுத்து டும் டும் டும் தான்! பிரபல சீரியல் ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

  திருவீழிமிழலை தான் சிவகார்த்திகேயனின் பூர்வீக கிராமம் என கூறப்படுகிறது. இங்கு தான் சிவகார்த்திகேயன் தற்போது புதுவீடு கட்டியுள்ளார். இன்று புதுமனை புகுவிழா பிரம்மாண்டமாக நடந்தது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் வேஸ்டி சட்டையில் மிகவும் எளிமையாக இருக்கிறார். அவரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் யாரும் அழைக்கப்படவில்லை. முழுக்க முழுக்க சிவா தனது சொந்தக்காரர்களை மட்டுமே அழைத்து இருக்கிறார். இவர்களை தாண்டி அருவி பட இயக்குனர் அருண் புருஷோத்தமனும் இந்த விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறார். அவரது புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

  இதையும் படிங்க.. பாக்கியாவை போலீஸில் மாட்டிவிட்ட கோபி.. கதறி அழும் குடும்பத்தினர்!

  ஏற்கெனவே சிவாவுக்கு இன்னொரு பிரம்மாண்ட வீடு (luxury house) உள்ளது.அந்த வீட்டில் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள், தீபாவாளி கொண்டாட்டங்கள் ஏற்கெனவே வெளியாகி வைரலாகின. இருப்பினும் தற்போது தனது பூர்வீக இடத்திலும் சிவா வீடு கட்டி இருப்பது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் இயல்பான நடிப்பாலும், மிமிக்ரி பேச்சாற்றலாலும் குறும்பு தனத்தினாலும் மக்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் ’டான்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Kollywood, Sivakarthikeyan, Tamil Cinema